2025 ஜூலை 26, சனிக்கிழமை

வயோதிப பெண்ணின் பயணப்பையில் ரவைகள்: பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் இருந்து கண்டிக்கு பயணமாக இருந்த வயோதிப பெண் ஒருவரின் பயணப்பையில் கைத்துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை அப்பெண் வவுனியா பொலிஸில் ஒப்படைந்த சம்பவமொன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

'முல்லைத்தீவு முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தில் இருந்து கண்டிக்கு செல்வதற்காக வவுனியா வந்தடைந்த வயோதிப பெண்ணொருவர் வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்த பொது மலசல கூடத்திற்கு செல்வதற்காக தனது பயணப்பையை ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

மீண்டும் தனது பயணத்தை தொடர்வதற்காக கண்டிக்கு செல்லும் பேரூந்தில் ஏறி தனது தேவையின் பொருட்டு பயணப்பையை திறந்தபோது அவற்றில் துப்பாக்கி ரவைகள் உள்ளதை அவதானித்துள்ளார்.

உடனடியாக பேரூந்து சாரதியிடம் விடயத்தை கூற அவர் அப்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் விடயத்தை கூறியுள்ளார்.

மேற்படி ரவைகள் மைக்கேரா பிஸ்டலுக்கு பயன்படுத்தும் ரவைகள் எனவும் 18 ரவைகள் குறித்த பெண்ணின் பயணப்பையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

எனினும் இப்பெண்ணின் பயணப்பையில யார் இதனை வைத்தனர் என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X