2025 ஜூலை 26, சனிக்கிழமை

வடமாகாணசபைச் செயலாளர்கள் ஏதேச்சதிகார போக்குகளை கைவிட வேண்டும்: சி.வி.

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாணசபைச் செயலாளர்கள் தங்களது ஏதேச்சதிகாராமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தங்களது பதவிகளை இராஜினமாச் செய்துவிட்டு புதியவர்களை நியமிப்பதற்கு  வழிவிட  வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்றுமுன்தினம்  ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'வடமாகாணசபையை மக்கள் பிரதிநிதிகளான நாம் பொறுப்பேற்பதற்கு முன்னர், வடமாகாணசபையின் அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு ஆளுநருடைய விருப்பு, வெறுப்புகளையும் மத்திய அரசினுடைய அமைச்சர்களின் விருப்பு, வெறுப்புகளையும் மற்றும் திருப்திப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றி வந்தனர். இந்த நிலையில், செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பலருக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாணசபை அமைச்சர்களுடனும் உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு  முடியாமல் இருக்கின்றது.

இந்த நிலைமை ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

கடந்த 03 தசாப்தங்களாக நிலவிவந்த யுத்தத்தின் பாதிப்புக்களை வடமாகாண மக்கள் நேரடியாக அனுபவித்தவர்கள்.
அந்த மக்கள் வடமாகாணசபையை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தபோது, பல எதிர்பார்ப்புகளையும் சேர்த்தே மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.

ஆனால், இன்று மக்கள் பிரதிநிதிகள் மாகாணசபைக்கு ஊடாக பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வதற்கு அதிகாரிகள் பலவிதமான தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறான அதிகாரிகள் கடந்த காலங்களில் எவ்வாறு பொதுமக்களுக்கான சேவைகளை முன்னெடுத்திருந்தார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

சில அதிகாரிகள் நாங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்கள். ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்கள் மத்திய அரசினுடைய அமைச்சர்களது அனுசரணை எமக்கிருக்கிறது. வடமாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்ற தோரணையில் செயலாற்றி வருகின்றார்கள். இவர்கள் நிச்சயமாக என்றோ ஒரு நாள் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள்.

மக்களுக்கான சேவையை சரியான முறையில் மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல முடியாத இவர்கள், உடனடியாக பதவிகளை இராஜினமாச் செய்துவிட்டு மக்கள் சேவையை முன்னெடுக்கக்கூடிய அதிகாரிகளை நியமிப்பதற்கு வழிவிட வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X