2025 ஜூலை 26, சனிக்கிழமை

சுய தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கரைச்சி பிரதேச  செயலகப் பிரிவில்  சுய தொழில்களை ஊக்குவிக்கும்  நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான  செயலமர்வு   செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரி எஸ்.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர் பி.மதிரூபன் கலந்துகொண்டார்.

உற்பத்தித்திறன்   மேம்பாட்டு  அமைச்சின்  தொழில்  உருவாக்கல் மற்றும் தொழில் வழிகாட்டல்  பிரிவினால்  இச்செயலமர்வுக்கு நிதி வழங்கப்பட்டதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன  தொழில்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தினையும் இவ் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

இந்நிகழ்வில்  சுயாதீன  தொழில்களில்  ஈடுபடும்  இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X