2025 ஜூலை 26, சனிக்கிழமை

யுத்தத்தின் பின்னரான வரவு - செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் இல்லை: சிவசக்தி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐந்து வரவு - செலவுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளபோதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்தினால் எந்தத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இணையும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசேட தேவைக்கு உட்பட்டோர் தின நிகழ்வு வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தின் நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த யுத்தத்தினால் வடக்கு,  கிழக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள்  வலுவிழந்து விசேட தேவையை எதிர்நோக்க வேண்டிய  நிலையிலுள்ளனர். இந்த மக்களது வாழ்வை மேம்படுத்துவதற்கு ஆக்க ரீதியான நடவடிக்கை எதனையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

யுத்தம் நடைபெற்று முடிந்ததன் பின்னர் இதுவரையில் ஐந்து வரவு - செலவுத்திட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்தினால்  எந்தத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

தொடர்ந்தும் அவல வாழ்வு வாழும் இவ்வாறான மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் உதவி செய்வதற்கு முன்வரவேண்டும். அவர்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்தி சமூகத்தில் அவர்களும் நல்ல நிலையில் வாழ்வதற்கு எம்மாலான ஒத்துழைப்புகளை அனைவரும் வழங்கவேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X