2025 ஜூலை 26, சனிக்கிழமை

வவுனியாவில் கடும் காற்று; பாடசாலையின் கூரை பறந்தது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் பாடசாலையொன்றின் கூரைத்தகடு விழுந்து நொருங்கியுள்ளது. இதனால், அப்பாடசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 03 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் 03 மாடிக் கட்டிடத்தின் கூரைத்தகடே இவ்வாறு விழுந்து நொருங்கியுள்ளது.

இருப்பினும்   மாணவர்கள் எவருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.

நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிவடையும் நேரத்தில்  கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. வீடு செல்வதற்கு ஆயத்தமான மாணவர்கள் பாடசாலை கட்டிடங்களினுள் ஒதுங்கிக் கொண்டிருந்த சமயமே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X