2025 ஜூலை 26, சனிக்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கான சரீர புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


மாற்றுத் திறனாளிகளுக்கான சரீர புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி, ஹன்டிகெப் இன்ரெநெஷனல் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோர் இணைந்து இந்தக் கட்டிடத்தினைத் திறந்து வைத்தனர்.

யு.எஸ்.எயிட் நிறுவனம், ஹன்டிகெப் இன்ரநெஷனல் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X