2025 ஜூலை 26, சனிக்கிழமை

பிள்ளைகள் இராணுவத்திடம் சரணடைந்ததற்கு நாங்களே சாட்சி; முள்ளிவாய்க்கால் மக்கள்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'இறுதி யுத்தத்தின் முடிவுற்ற நேரத்தில் வட்டுவாகல் பகுதியில் எமது பிள்ளைகள் இராணுவத்திடம் சரணடைந்ததற்கு  நாங்களே சாட்சிகளாக இருக்கின்றோம். இவ்வாறு இராணுவத்திடம் சரணடைந்த எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்' என்று காணமற் போனர்களின் உறவினர் ஜ.நா.சபையின் மனிதஉரிமை சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானியிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெயானி நேற்று (04) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து முள்ளிவாய்கால் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே காணமற்போனவர்களின் உறவினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். யுத்தம் நடைபெற்று முடிந்த பின்னர் எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் நாங்கள் ஒப்படைத்ததுடன், சிலர் இராணுவத்தின் சொல்லைக்கேட்டு சரணடைந்தனர்.

இவ்வாறு எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததற்கும், அவர்களாகச் சரணடைந்ததற்கும் நாங்களே சாட்சிகள். எப்படியாவது எங்கள் பிள்ளைகளை எம்மிடம் கொபண்டு வந்து சேர்ப்பதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள் என்று பெயானியிடம் மன்றாடினர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட வகையில் காணி சுவீகரிப்பும் அத்துமீறிய குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அம்மக்கள் அவரிடம் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X