2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளிநொச்சி நகரில் புதிய நூலகம் திறப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி. சிவகருணாகரன்


கிளிநொச்சி நகரில் றீ பில்டிங் ஒவ் சிறிலங்கா நிறுவனத்தினால் புதிய நூலகமொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடற் பணிப்பாளர் ஆகியோர் இந்நூலகத்தினை திறந்து வைத்தனர்.
சுமார், 5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்  இந் நூலகத்திற்கான நிதியுதியை றீ பில்டிங் ஒவ் சிறிலங்கா நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த நூலகத்திற்கான புத்தகங்களை ஏசியன் பவுண்டேசன் நிறுவனம் வழங்கியுள்ளது.

வடபகுதியில் இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது நூலகம் இது என இந்நிகழ்வில் கலந்துகொண்ட றீ பில்டிங் ஒவ் சிறிலங்கா நிறுவனத்தின் நடவடிக்கை இயக்குநர் அனந் கிளேயர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அன்ரன் நல்லதம்பி, கரைச்சிப் பிரதேச சபைச் செயலாளர் கி. கிருஷ்ணகுமார் மற்றும் கல்வி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X