2025 ஜூலை 24, வியாழக்கிழமை

நீரிறைக்கும் மோட்டாரை திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

நீரிறைக்கும் மோட்டார் ஒன்றை திருடியதாகக் கூறப்படும் இருவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் மற்றும்   நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள  வீடு ஒன்றிலிருந்து நீரிறைக்கும் மோட்டார் ஒன்றை திருடியதாகக் கூறப்படும் இவர்கள் இருவரையும்  கடந்த திங்கட்கிழமை முள்ளியவளைப் பொலிஸார் கைதுசெய்ததுடன், ஒழித்து வைக்கப்பட்ட நீரிறைக்கும் மோட்டாரையும்; கைப்பற்றினர்.

இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி நீரிறைக்கும் மோட்டாரைத் திருடி அருகில் உள்ள காட்டுக்குள் ஒழித்துவைத்துள்ளனர்.

நீரிறைக்கும் மோட்டார் திருட்டுப் போனமை தொடர்பில்  வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .