2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மன்னாரில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளருக்கான போட்டி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளரை தெரிவு செய்து பரிசு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத்தோட்ட போட்டியானது மன்னார் மாவட்டத்திலுள்ள  விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் நடத்தப்பட்டு முதல் 03 இடங்களைப் பெறும் வெற்றியாளர்கள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியான போட்டிக்குச் செல்வர்.

இதில் முதலாம் இடத்தைப் பெறும்  போட்டியாளர்களிடையே மாவட்ட மட்ட மதீப்பீடு நடைபெற்று இறுதியாக மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களில் முதலாம்  பரிசு 15,000 ரூபாவும் இரண்டாம் பரிசு 12,000 ரூபாவும் மூன்றாம் பரிசு 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயப் போதனாசிரியர் அலுவலகத்தில் போட்டி விதிமுறைகள் பற்றிய முழுமையான விபரங்களை பெற்று போட்டிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை  டிசெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும்.

இதன்போது விவசாயப் போதனாசிரியர் அல்லது பிரதி விவசாயப்பணிப்பாளர் அலுவலகம், மன்னார் முகவரியிட்டு அனுப்பிவைக்க வேண்டும். 
அல்லது நேரடியாகவும் விண்ணப்பப்படிவங்களை மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் கையளிக்க முடியும்.

கடித உறையின் இடதுபக்க மேற்பக்கத்தில் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளருக்கான போட்டி - 2013 எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
மாவட்ட மட்டத்தில் தெரிவுசெய்யப்படும் வெற்றியாளர்களுக்கு தைப்பொங்கல் தினத்தையொட்டி  நடைபெறும் உழவர் விழாவில் வடமாகாண விவசாய அமைச்சர்  பொ.ஜங்கரநேசன்  பரிசில்கள் வழங்கிவைக்கவுள்ளார்.

எனவே, சகல வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
மேலதிக விபரங்களுக்கு அருகில் உள்ள விவசாயப் போதனாசிரியரை நாடுமாறும் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .