2025 ஜூலை 24, வியாழக்கிழமை

நானாட்டன் பிரதேச செயலகம் தாக்கப்பட்டமையினை கண்டித்;து பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


நானாட்டான் பிரதேச செயலகம் திங்கட்கிழமை (9) பொன் தீவு கிராம மாக்களினால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை நானாட்டான் பிரதேச செயலக பணியாளர்கள் முழு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பணியாளர்கள் குறித்த சம்பவத்தை கண்டித்து திங்கட்கிழமை (9) காலை முதல் மாலை வரை அலுவலகத்திற்கு வெளியில் அமர்ந்திருந்தனர்.

இதேவேளை நானாட்டான் பிரதேச செயலகம் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து மன்னார் மற்றும் முசலி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அமைதி  வழியிலான  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும்; ஈடுபட்டனர்.

காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை பிரதேச செயலகங்களுக்கு வெளியில் சுலோகங்களை ஏந்தியவாறு இவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .