2025 ஜூலை 24, வியாழக்கிழமை

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சர்வமத மற்றும் இன பன்மைத்துவத்தின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஆரம்பச்  செயலமர்வு மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார் சமாதானத்திற்கும் மீளிணக்கத்திற்குமான வளங்கள் (ஆர்.பி.ஆர்) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற   இந்தச் செயலமர்வுக்கு தேசிய சமாதானப் பேரவை அனுசரணை வழங்கியது.

மன்னார் ஆகாஸ் விடுதியில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட 30 பேர் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில்  தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பளர் ஜெஹான் பெரேரா, உதவி நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சமன் செனவிரட்ன, ஆர்.பி.ஆர்.அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.சபூறுதீன், ஆர்.பி.ஆர்.அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் செல்வானந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்தச் செயலமர்வின்போது மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவைக்கு இணைத் தலைவர்களாக அருட்பணி தமிழ்நேசன் அடிகளார், சிவசிறி தர்மகுமார குருக்கள், அஸ்சொய்க் எஸ்.ஏ.அசீம் மௌலவி, வண.விமலரத்ன தேரர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .