2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வலய கல்வி பணிப்பாளரின் வீட்டில் திருடியருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்
 
முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளரின் வீட்டில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்செய்யப்பட்டுள்ளார்.இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வலய கல்வி பணிப்பாளரின் முள்ளியவளை ஹிஜ்ராபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கின்ற வீட்டில் சுமார் 75,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி திருடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

இது பற்றி விசாரணைகளை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்ததுடன் திருடப்பட்டதாக் கூறப்படும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் நேற்றைய தினம் நிதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை இம்மாதம் 17ஆத் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .