2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியா வடக்கில் முதன்முறையாக மத்தியஸ்தசபை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதன்முறையாக மத்தியஸ்தசபை அங்கத்தவர்களுக்கான  நியமனக் கடிதங்கள் நேற்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

20 கிராம அலுவலகர் பிரிவை உள்ளடக்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 15 அங்கத்தவர்களை உள்ளடக்கி மத்தியஸ்தசபை உருவாக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்தியஸ்தசபை அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், உத்தியோகபூர்வமாக மத்தியஸ்தசபையின் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கனகராயன்குளம், புளியங்குளம், நெடுங்கேணி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், வங்கிகளின் முகாமையாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .