2025 ஜூலை 24, வியாழக்கிழமை

புளியங்குளத்தில் சமுர்த்தி வங்கிச்சங்கம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, புளியங்குளத்தில் சமுர்த்தி வங்கிச் சங்கம் நேற்று புதன்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தித் திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு அப்பகுதிக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டு சமுர்த்தித் தி;ட்டம் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரை காலமும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இயங்கி வந்த புளியங்கும் வங்கிச்சங்கம் நேற்றையதினத்திலிருந்து புளியங்குளத்தில் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இந்த  வங்கியை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளா வீ.ஆயகுலன், பிரதேச செயலகத்தின் பிரதான கணக்காளர், பிரதம லிகிதர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி மகா சங்க முகமையாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .