2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்ட போதகர்கள் ஐக்கியம் மற்றும் வன்னி ஆசிர்வாதப்பணி என்பனவற்றின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இளம் விதவைகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு தண்ணீரூற்றிலுள்ள தேவ சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு 'இந்நாட்டின் யேசு விடுவிக்கிறார்' பணியகத்தின் அழைப்பாளர் சகோதரர் மோகன் சீ லாசரஸ் தலமை தாங்கினார்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தலுள்ள கணவர்களை இழந்த 45 வயதுக்கு உட்பட்ட சுமார் 400 விதவைகளுக்கு இதன்போது உடை உள்ளிட்ட பொருட்களை இந்நியாவிலிருந்து வருகை தந்த யேசு விடுவிக்கிறார் பணியகத்தின் அழைப்பாளர் சகோதரர் மோகன் சீ லாசரஸ் உட்பட கிறிஸ்தவ மதத் தலைவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .