2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மன்னார் ஆயர் தொடர்பான கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசுப்பு ஆண்டகை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசகராக செயற்பட்டு வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வடக்கில் உள்ள தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் மன்னார் ஆயர் செயற்பட்டு வருகின்றார். கடந்த காலங்களில் வடக்கில் காணாமல் போனர்வகள், கடத்தப்பட்டவர்களின் நிலை இதுவரை என்ன என்று தொரியாத நிலையில் உறவுகள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனால் அரசாங்கம் அவருக்கு புலிகளின் தலைவர் என பெயர் சூட்டியிருந்தது.

மன்னார் ஆயர் மீது தென்பகுதியில் உள்ள சிங்கள மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை தோற்கடிக்கும் முகமாக அவருக்கு புலிகளின் தலைவர் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளமையினை நாம் அறிகின்றோம்.

இந்த நிலையில் தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசகராக செயற்பட்டு வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் தமிழ் மக்களுக்கு நீதியானதும், சுதந்;திரமானதுமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். காணாமல்; போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் நிலைப்பாடு என்னவென்று வெளிப்படையாக தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செயற்பட்டு வருகின்றார்.

யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதை அரசாங்கம் மூடி மறைத்துள்ள போது ஆயர் அவர்கள் உண்மைத்தகவலை வெளிக்கொண்டு வந்தனர்.

இந்த செயற்பாடுகளின் மத்தியிலே ஆயருக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .