2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிவகருணாகரன்


சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின நிகழ்வு வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் தொடர்பில் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.செல்வக்குமரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் செ.ஸ்ரீநிவாசன் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்ட தலைவரும் சட்டத்தரணியும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானுமாகிய விஜயரானி கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .