2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் முறைகேடு

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வட மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

'தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்ட ரீதியில் வழங்கப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் முறைகேடுகள் காணப்படுகின்றன. நீண்டகாலமாக யுத்த சூழலுக்கு மத்தியிலும் தொண்டர் சிற்றூழியர்களாக பணியாற்றிய பலருக்கு நியமனங்கள் வழங்கப்படாது அரசியல் செல்வாக்கு காரணமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட வதிவிடச் சான்றிதழ்கள் கவனத்தில் கொள்ளப்படாதும் மோசடியாக பெறப்பட்ட வதிவிடச் சான்றுகளின் அடிப்படையிலும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தை சாராத வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அமைச்சர்களின் ஆதரவுடன் வடபகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு முறைகேடான அரச நியமனம் ஆகும். இது தேர்தலை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எமது பகுதியைச் சேர்ந்த பல காலமாக தொண்டர்களாக பணியாற்றிய பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந் நியமனம் தொடர்பாக உடனடியாக விசாரணை குழு அமைக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .