2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மாந்தை விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார்,மாந்தை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

பெரிய மடுவிலிருந்து மன்னாருக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்தும்,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக பயணித்த கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில்  இராணுவ கப் வாகனத்தின் சாரதியான இராணுவ சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த வாகனத்தில் பயணித்த மேலும் 2 இராணுவ வீரர்கள் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில்  மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .