2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியா வடக்கு பிரதேசத்தில் யானைகளின் தொல்லை அதிகரிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலும் யானைகளின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்னர்.

புளியங்குளம், பழையவாடி, ஊஞ்சல்கட்டி, மருதோடை, குளவிசுட்டான் உள்ளிட்ட பகுதிகள் உட்பட பல பகுதிகளிலும் இவ்வாறு யானைகள் மக்களின் குடிமனைகளுக்குள் வருவதுடன் தென்னை, வாழை உட்பட பல வகையான மரங்களையும் சேதப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, புளியங்குளம் பகுதியில் நேற்று சனிக்கழமை தனியார் வகுப்பொன்றுக்கு சென்று வீடு திரும்பிய மாணவியொருவரை யானை துரத்தியுள்ளது. எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் யானை துரத்தப்பட்டு மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .