2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கூட்டமைப்பின் செயற்பாடுகள் அரசை சர்வதேச விசாரணைக்கு இழுத்துச்செல்ல வேண்டும்: சி.சிவமோகன்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரினவாத அரசை சர்வதேச போர்க் குற்றவிசாரணைக்கு உட்படுத்துவதை நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும்' என வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமது ஆதரவாளர்களுடனான நேற்றைய (15) சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,

'எமது மண்ணில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தால் மரணித்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் ஆத்மாக்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளன. இதனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரினவாத அரசை சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்குட்படுத்த 2014ஆம் ஆண்டு பங்குனி மாதத்தை சர்வதேசம் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

இதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும், அறிக்கைகளும் அது நோக்கியதாக இருக்க வேண்டும்' என்றார்.

'இந்த விடயத்தில் எமது மக்களுக்காக போராடுகின்ற இந்திய மக்கள், தென்னிந்திய மீனவர்கள், புலம்பெயர் தமிழர்கள், ஜனநாயக பண்புகளை மதிக்கும் சிங்கள முஸ்லிம் சகோதரர்கள் ஆகியோரின் மனங்களை புண்படுத்தும் அறிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ கூட்டமைப்பு உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் போர் குற்ற விசாரணையில் இருந்து தப்புவதற்காக எமக்கு ஆதரவாக செயற்படுபவர்களை எமது மக்களிடம் இருந்தும் கூட்டமைப்பிடம் இருந்தும் பிரித்து வைக்க முயன்று வருகின்றது.

குறிப்பாக தென்னிந்திய மீனவர்கள் பிரச்சினையை கூட அரசாங்கம் அவ்வாறு தான் கையாள முயல்கிறது. அவ்விடயத்தில் நாம் கவனமாக செயற்பட வேண்டும்' எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .