2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பட்ஜெட் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

Super User   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கொன்று இன்று திங்கட்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல கரிச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் அரச திட்டங்களில் ஏற்படும் திணைக்கள ரீதியான மாற்றங்கள் மற்றும் துறை சர்hந்த அபிவிருத்தி திட்டங்கள் என்பன தொடர்பாகவும் அரச அதிகாரிகளுக்கு அவர் விளக்கமளித்தார்.

குறிப்பாக சமுர்த்தி திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் மற்றும் பெண்களுக்கான அபிவிருத்தி தி;ட்டங்கள் தொடர்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் ஆண்டில் பட்ஜெட்டின் ஊடாக சமுர்த்தி திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், பெண்களின் சுய தொழில் அபவிருத்திகள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பி.அபயகோன், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புத்தளம், அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலளார்கள் மற்றும் அரச திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .