2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மழை வேண்டி தொழுகை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் ஏற்பாடு செய்த 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை இன்று 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன், குத்பா பிரசங்கம் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனைகள் என்பனவும் இடம்பெற்றன.

இந்த தொழுகையில் வடமாகாண சபை உறுப்பினர் யாஸின் ஜவாஹிர் (ஜனோபர்) மற்றும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் பிரதம இமாம்களும், ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை இல்லாமையால் கடும் வரட்சி காணப்படுவதுடன், முறிப்பு, தண்ணிமுறிப்பு ஆகிய குளங்களிலும் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

இதனால் இப்பகுதியிலுள்ள விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .