2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பூநகரி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது முறை தோல்வி

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.சிவகருணாகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்திலுள்ள பூநகரி பிரதேசசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி சபையின் தவிசாளர் சிறீஸ்கந்தராசாவினால் சபையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருத்தமற்றதென சபையினரால் தெரிவிக்கப்பட்டு திருத்தங்கள் மெற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

இதனையடுத்து தவிசாளரால் திருத்தங்கள் செய்யப்பட்டு சபையில் வெள்ளிக்கிழமை மீளவும் மேற்படி பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனாலும், எதிர்க்கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் உறுப்பினர்களால் மீளவும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அப்போது  திருநத்தங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெளிவு படுத்தப்பட்டநிலையில் ஆளும்கட்சியைச்சேர்;ந்த ஏனைய உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .