.JPG)
-சி.சிவகருணாகரன்
இயக்கச்சியின் கிழக்கே சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்தை அண்மித்த பகுதியில் புதிய சுற்றுலா விடுதி ஒன்று வனவளப் பாதுகாப்பு அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு அமைச்சின் நிதியீட்டத்தில் சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டடுள்ள இந்த விடுதி இயற்கைச் சூழலையும் பறவைகள் விலங்குகள் சரணாலயத்தினையும் கொண்ட அமைவிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இயக்கச்சி சந்தியிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் இந்தச் சுற்றுலா விடுதி சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் காட்டு மரங்கள், பனங்கூடல்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிக்கு 'இயற்கை விடுதி' (Natural Park) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
'பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் சகல தரப்பினருக்குமான சுற்றுலா விடுதியாக இது அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பிரதேசத்தின் இயற்கை வளப்பாதுகாப்பு மேலும் வளப்படுத்தப்படும். இந்தச் சரணாலயம் வளப்படுத்திப் பேணப்படும் என இந்த விடுதியைத் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) திறந்து வைத்த வனவளப்பாதுகாப்பு அமைச்சர் காமினிவிஜித விஜயமுனிசொய்சா தெரிவித்துள்ளார்.