2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மனித புதைகுழி மீண்டும் தோண்டப்பட்டது

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார்,  திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை (28) காலை 8.30 மணிக்கு குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது.

இதன்போது, மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மனித புதை குழி தோண்டும் போது உடற்கூற்று நிபுணர் ஆர்.எம்.பி.ராஜகருணா, அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி பி.யு.மடவல, தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்தின, பேராதணை பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி கே.நந்த சேன, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் டி.லக்சிறி விஜயசேன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வி.ரி.சுகதபால, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த ஆகியோரும் பிரசன்னமாகியிருந்னர்.

இதேவேளை குறித்த மனித எழுலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்திற்கு வருகைத்தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.

மனித எழும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமைவரை  தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (20) ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் இருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் நீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டிய போது மூன்று மண்டையோடுகளும் மனித எழும்புகளும் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தோண்டப்பட்டன.

இதன்போது சுமார் 10 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • KMohan Saturday, 28 December 2013 01:31 PM

    நல்லா தோண்டுங்கள், வடக்கு முதல் கிழக்கு மாகாணம் வரை நிறைய இருக்கும். 1983 தொடக்கம் வரை 2013 காலமாக இருக்குது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .