2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு தீக்கிரை

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு நேற்று சனிக்கிழமை எரியூட்டப்பட்டுள்ளது. வவுனியா சுந்தரப்புரப் பகுதியிலுள்ள குறித்த பெண்ணின் வீடே ஏரியூட்டப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த குடும்பத்தை சேர்ந்த யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணின் தாயும் சகோதரர்களும் வசித்து வருகின்ற வீடு எரியூட்டப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற வேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருற்ததுடன் ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர்.இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் வீட்டில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தினால் அமைத்துக கொடுக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .