2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியாவில் உப உணவு உற்பத்தியில் ஆர்வம் செலுத்த வேண்டும்: பரந்தாமன்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதனால், உப உணவு உற்பத்தியில் மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்குப்  பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற  கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வறட்சியான காலநிலை நெல் உற்பத்தியாளர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. அவர்களின் சேமிப்பில் இருந்த நெல்லும் தற்போது வயல்களில் விளைச்சலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உருவாகலாம். எனவே முன்னெச்சரிக்கையாக உப உணவுப் பயிர்ச்செய்களை  உடனடியாக மேம்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு  அரசாங்க  உத்தியோகத்தர்கள் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
தற்போது விவசாயத் திணைக்களத்துடன் வவுனியா வடக்கு பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் அடிப்படையில், சோளம் மற்றும் மரவள்ளி உற்பத்திகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இந்த உப உணவு உற்பத்திகளுக்கு நிதி மற்றும்; ஏனைய மூலப்பொருட்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். எனவே இந்தச் செயற்பாட்டை சிறப்பாக முன்னெடுப்போமாக இருந்தால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உணவுக்கு  பஞ்சம் ஏற்படாது தவிர்க்க வழி ஏற்படும்.' என்றார்.

  Comments - 0

  • peraba Wednesday, 15 January 2014 09:50 AM

    அப்போ விவசாய திணைக்களத்தின் தொழில் என்ன? இத்திணைக்களம் தேவை இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .