2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பனைமரச் சிலாகைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 30 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


சட்டவிரோதமாக பனைமரங்கள் வெட்டப்பட்டு அவற்றின் சிலாகைகள் கொண்டுசெல்வதற்கு தயாராகவிருந்தபோது, அவற்றினை இயக்கச்சிப் பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 500,000 இலட்சம் ரூபா பெறுமதியான பனைமரச் சிலாகைகளையே பளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து இயக்கச்சி விநாயகபுரம் பகுதிக்குச்  சென்ற பொலிஸார் பனைமரச் சிலாகைகளை கைப்பற்றி பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

முறையாக அனுமதி; பெற்று பனைமரங்கள் வெட்டப்படுவதாக அந்த பிரதேச மக்களிடம் பொய்கூறி; ஒருவர் பெருமளவு பனைமரங்களை வெட்டிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சந்தேகமடைந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். 

பொலிஸார் வருவதை அறிந்த சட்டவிரோதமாக பனைமரங்களை தறித்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .