2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மன்னாரில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகரும் சமூக ஆர்வலருமான இருதயநாதன் சாள்ஸினால் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார், மாந்தை மேற்;கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்றக்கிராமங்களான சன்னார், ஈச்சளவக்கை, பெரிய மடு ஆகிய மூன்று கிராமங்களுக்கு திங்கட்கிழமை (30) விஜயம்செய்த இவர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி மாணவர்கள் தமது பாடசாலை கல்வி கற்றலுக்கு தேவையான  உபகரணங்களின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கேள்வியுற்ற இவர் ஏற்கனவே அக்கிராமங்களுக்கு விஜயம் செய்து மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களின் தேவைகளை பூர்தி செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைவாக திங்கட்கிழமை (30) குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அவர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கையளித்துள்ளார்.

இதன்போது, சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 350 மாணவர்களுக்கும் ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கும் பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த  சேர்ந்த 30 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .