2025 ஜூலை 24, வியாழக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என வவுனியா விவசாய பண்ணையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த 15 முதல் 20 வருடங்களாக விவசாய பண்ணையில் பண்ணைத் தொழிலாளாகளாக பணியாற்றியாற்றி வருகின்றோம். இதன் காரணமாக நாம் பல சலுகைகளை இழந்து வருவதுடன் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியவாதிகாளாக உள்ளோம்.

பண்ணையில் அனைத்து பணிகளையும் நீண்ட காலமாக செய்யும் எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல், வேறு இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சிலர் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எம்மோடு நாள் சம்பளத்திற்கு பணியாற்றிய பலர் வேறு தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்து சென்றுள்ளதுடன் சிலர் நிரந்தர நியமனம் கிடைக்காமலேயே ஓய்வு நிலைக்கும் சென்று விட்டனர்.

அண்மையில் எம்மோடு பணியாற்றிய பெண்னொருவர் மின்னல் தாக்கத்திற்கு பலியான போது அவரது குடும்பத்திற்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அக் குடும்பம் பெரும் கஸ்டத்துடன் வாழ்ந்து வருகின்றது.

எமக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படாவிட்டால் எமக்கும் இந்நிலையே ஏற்படும். எனவே நிரந்தர நியமனம் வழங்குவதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  
'இது தொடர்பில் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமையால் வட மாகாண விவசாய அமைச்சே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .