2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கனேடிய எம்.பி ராதிகா, மன்னாருக்கும் விஜயம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்,  மன்னாருக்கும் விஜயம் செய்துள்ளார்.

மன்னாருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த அவர், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்  பா.டெனிஸ்வரனை மன்னாரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் தற்போதைய நிலை பற்றியும் அமைச்சர் பா.டெனிஸ்வரன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம்   எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரனும் உடன் இருந்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மறை மாவட்ட ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்று ஆயர் இல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .