2025 ஜூலை 24, வியாழக்கிழமை

அட்டமஸ்கட சிறுவர் துஷ்பிரயோக வழக்கு: பிக்குவுக்கு பிணை

Kanagaraj   / 2013 டிசெம்பர் 31 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபிலநாத்


வவுனியா, அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பிக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுவன் ஒருவன் கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பிக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்தே அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தின் காப்பாளரும் விகாராதிபதியுமான கல்யாணதிஸ்ஸ தேரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருக்கே இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரின் அறிக்ககையின் பிரகாரம் சட்டமா அதிபர் பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்ததை அடுத்தே வவுனியா நீதிமன்ற நீதிவான்  இராமக்கமலன் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுதலை செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .