2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கிளிநொச்சி குளங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் சிரமம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களில் நீர் மட்டங்கள் குறைந்துள்ளமையால் இவ்வருடம் சிறுபோகச் நெற்செய்கை முற்றாக பாதிப்படையும் நிலைவருமென அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

இரணைமடு, அக்கராயன்குளம், கல்மடு, கனகாம்பிகை, கரியாலை நாகபடுவான், பிரமந்தனாறு, புதுமுறிப்பு, வன்னேரிக்குளம் ஆகிய 7 பிரதான குளங்கள் போதிய நீரின்றி காணப்படுகின்றன.
வழமையாக வருடந்தோறும் டிசெம்பர் 31ஆம் திகதியன்று இக்குளங்கள் கொள்ளளவின் உயர்மட்ட நீரைக் கொண்டிருப்பதுடன் வான்பாயும் நிலையையும் கொண்டிருக்கும்.

இதன் அடிப்படையில், இரணைமடுக்குளம் 34 அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 227 சதுர மைல்கள்), அக்கராயன்குளம் 23 அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 23 சதுர மைல்கள்), கல்மடுக்குளம் 24 அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 26.50  சதுர மைல்கள்), கனகாம்பிகைக்குளம் 10 அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 10.30  சதுர மைல்கள்), கரியாலை நாகபடுவான்குளம் 10 அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 46 சதுர மைல்கள்), பிரமந்தனாறு 12 அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 25.89   சதுர மைல்கள்), புதுமுறிப்புக்குளம் பதினாறு அரை அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 10.50  சதுர மைல்கள்), வன்னேரிக்குளம் ஒன்பதரை அடியையும் (நீரேந்தும் பிரதேசம் 5 சதுர மைல்கள்) கொள்ளவாகக் கொண்டுடிருக்கும்.

ஆனால் தற்போது மேற்படி குளங்களில் மிகவும் தாழ்வான நிலையில் நீர் மட்டம் காணப்படுகின்றன. இம்முறை பெரும்போக நெற்செய்கையில் விளைந்து வரும் ஒரு பகுதி நெற்செய்கையையும் பருவம் தப்பி பொழியும் மழை நீர் அழித்து விடுமோ? எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .