2025 ஜூலை 24, வியாழக்கிழமை

துணுக்காய் கல்விக்கோட்டத்தில் கடமையாற்றும் வெளிமாவட்ட ஆசிரியர்கள் சிரமம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 01 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் கல்விக்கோட்டத்திலுள்ள கூடுதலான பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகள் இதுவரை அமைக்கப்படாமையினால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக வெளிமாவட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு  துணுக்காய் கல்விக்கோட்டத்தில் 18 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் கூடுதலான பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகள் இதுவரை அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இப்பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கோட்டைகட்டியகுளம் அ.த.க பாடசாலை, தென்னியன்குளம் அ.த.க.பாடசாலை, உயிலங்குளம் அ.த.க பாடசாலை, ஆலங்குளம் அ.த.க பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மையாலும் தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக வெளிமாவட்ட ஆசிரியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .