2025 ஜூலை 24, வியாழக்கிழமை

குடிநீர் வழங்கப்படாமையினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2014 ஜனவரி 01 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


முசலி பிரதேச சபைக்கு முன்னால் வெளிமலை கிராம மக்கள் இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சபையினால் கடந்த ஐந்து நாட்களாக குறித்த பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக பலமுறை பிரதேச சபை செயலாளரிடமும் பிரதேச சபை உறுப்பினர்களினதும் கவனத்திற்கு கொண்டு வந்தும் இது தொடர்பாக யாரும் கரிசனை கொள்வதாக இல்லை என மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இருந்து அயல் கிராமங்கஞக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இருந்தும் பிரதேச சபையில் கடமையாற்றும் சில ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் கிராம மக்களுக்கு நீர் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் குறித்து பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இப்பிரச்சினைக்கான தீர்வை வெகுவிரைவில் பெற்றுத் தருவதாக பிரதேச சபை தவிசாளார் உறுயளித்துள்ளார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .