2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பஸ் வண்டி மீது கல் வீச்சு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த  பஸ் வண்டி நேற்று புதன்கிழமை பிற்பகல் விஸ்வமடுப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், இந்தக் கல்வீச்சுத் தாக்குதலின்போது பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைவடைந்துள்ளன.

இந்த பஸ் வண்டியில் பயணித்த மூவரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்துள்ள மூவரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவரில் பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .