2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கிளிநொச்சிக்கு புதிய சமுர்த்தி உதவி ஆணையாளர் நியமனம்

Kogilavani   / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சிக்கு புதிய சமுர்த்தி உதவி ஆணையாளராக எம்.எம்.இர்பான் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் புதன்கிழமை (01) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரைகாலமும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளராக இவர் கடமையாற்றி வந்தார்.

அத்துடன், இதுவரைகாலமும் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளராகவிருந்த திருமதி பரமோதயன் ஜெயராணி நேற்று (01) முதல் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக நியமனம் பெற்றுச் சென்றிருந்தமையால் அவ்வெற்றிடத்திற்கே எம்.எம்.இர்பான் நியமனம் பெற்றுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .