2025 ஜூலை 26, சனிக்கிழமை

கழிக்கப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் சேகரிப்பு

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


பாவனைக்கு உதவாத இலத்திரனியல் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை வவுனியா நகரசபை மைதானத்தில்  நேற்று  வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இதற்கான  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர், வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X