2025 ஜூலை 26, சனிக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தங்கூசி மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்களின் 15 வலைகளை கடற்றொழில் பரிசோதகர்கள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்ததாக அம்மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

இரகசியமாக தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது.  இந்நிலையில் பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி, வங்காலை போன்ற கடற்கரை பகுதிகளில் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது,  தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை  பறிமுதல் செய்ததுடன், இவை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டது.  மேலும், குறித்த 06 மீனவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்துவருவதாகவும்

இம்மீனவர்களை  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குறித்த வலைகளை  நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் வி.எஸ்.மெராண்டா  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X