2025 ஜூலை 26, சனிக்கிழமை

பாவனைக்கு உதவாத இலத்திரனியல் பொருட்கள் சேகரிப்பு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பாவனைக்கு உதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களை சேகரிக்கும் முகாமைத்துவ வாரத்தின் இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை(30) மன்னார் அரசாங்க அதிபரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்மாதம் 27ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியினை  பாவனைக்கு உதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களை சேகரிக்கும்  முகாமைத்துவ வாரமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரகடனம் செய்திருக்கின்றது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்படி வாரத்தின் இறுதி நிகழ்வுகள்  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது.

பாவனைக்கு உதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் கழிவுகள் உள்ளடங்கிய ஒரு தொகுதியினை மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வி.றூபன் லெம்பேட் மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்திடம் கையளித்தார்.

பாவனைக்கு உதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் கழிவுகளை பொது மக்கள் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி வரையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் அலுவலகம் அமைந்திருக்கும்  மன்னார் நகர பழைய நூலக வளாகத்தில் ஒப்படைக்க முடியும என இதன்போது அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.பரமதாஸ் மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் மன்னார் அரச அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் சிறப்புரையாற்றியிருப்பதோடு சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்தினையும் இவர்கள் பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X