2025 ஜூலை 26, சனிக்கிழமை

வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு வவுனியா குடியிருப்பு விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை மாலை (29) இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் சனத் பிரியந்த தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், வன்னி ஊடகவியலாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

இதன் பிரகாரம் வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக உபாலி பந்துல செனவிரத்ன, உபதலைவராக நவரத்தினம் கபிலநாத், செயலாளராக கிருஸ்ணகோபால் வசந்தரூபன், உப செயலாளராக டபிள்யு. வினோத், பொருளாளராக பண்டார விபுலசேன, நிர்வாக குழு உறுப்பினர்களாக எஸ். நிசாந்த, ரொமேஸ் மதுசங்க, நிசங்க மாதவகுலசூரிய, சி. கஜேந்திரகுமார், ப. ரோன் கனிசியஸ், எஸ். தயாளன் ஆகியோரும் ஆலோசகர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்  பி.மாணிக்கவாசகம், தினசேன ரத்துகமகே ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X