2025 ஜூலை 26, சனிக்கிழமை

பிரஜாவுரிமையை நிலைநாட்ட வாக்காளராக பதிவுகளை மேற்கொள்ளுங்கள்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

பிரஜாவுரிமையை நிலைநாட்ட வாக்காளாராக பதிவுகளை மேற்கொள்ளுங்கள் என வட மாகாண போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் வெள்ளிக்கிழமை (30) தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் வாக்காளராக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை ஏனெனில், யுத்த காலத்தில் எந்தக் கிராமங்களிலும் சரியான முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது அரசியல் வாதிகளாலும், அரசியல் வாதிகளால் ஆளப்பட்ட அரச அதிகாரிகளாலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டது.

அது எவ்வாறு இருந்தாலும் தமது பிரஜா உரிமைகளை நிலைநாட்டவும் தமது வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டவும் பல மக்கள் தமது வாக்காளர் பதிவுகளை மேற்கொண்டு தம்மை வாக்களிப்புக்கு உட்படுத்தினர்.

எனவே, இந்த வேளையில் அந்த மக்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதில் எந்தப் பின்னடிப்பும் இல்லை.
யுத்தத்துக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூhராட்சி தேர்தல், இறுதியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் இவ் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்களது வாக்குகளே அதிகம் இரத்துச் செய்யபட்டன.

இனிமேல் அவ்வாறான தவறுகள் இடம்பெறக் கூடாது என்றால் தமிழ் மக்கள் அனைவரும் முதலில் வாக்காளர்களாக மாறவேண்டும். எனவே ஜூன் மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்படும் வாக்காளர் தினத்தில் தொடக்கி ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் எமது மக்கள் அனைவரும் தமது வாக்காளர் இடாப்புக்களை பரிசீலனை செய்து பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என உங்கள் அனைவரையும் அன்பாக கேட்டு நிற்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது மக்களின் அசட்டையான போக்கால் எமது வாக்கு வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புபட்டு எமது தொகுதிகளுக்கான நாடாளுமன்ற ஆசனங்களும் குறைக்கப்பட்டுள்ளமையும் யாவரும் அறிந்ததே.
எனவே, நீங்கள் உங்கள் பதிவுகளை பரிசீலனை செய்யும் பொது அயலவர்க்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி அவர்களும் பதிவுகளை மேற்கொள்ள உதவுங்கள்.

அதுமட்டுமல்லாது வாக்காளர் பதிவுகளை பலர் கடந்த காலங்களில் தவறுதலாக பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்ததுள்ளது.

பலர் இரண்டு பிரதேசங்களில் அல்லது இரண்டு மாவட்டங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
எனவே, அவ்வாறானவர்களையும் இனங்கண்டால் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அத்தவறுகளை நிவர்த்தி செய்யுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X