2025 ஜூலை 26, சனிக்கிழமை

வீட்டுத்திட்டத்தை குழப்ப முயற்சி: ஜோர்ஜ்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பாரதிபுரம் மக்களுக்கு கிடைக்க இருக்கும் வீட்டுத் திட்டத்தை குழப்பும் வகையில் உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிடுவது வருத்தமளிக்கிறது என வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஜோர்ஜ் வொசிங்டன் இன்று (31) தெரிவித்துள்ளார்.

பாரதிபுரம் மக்களை வெளியேறுமாறு அமைச்சர் ஒருவர் கூறியதாக வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வவுனியா, பாரதிபுரம் பிரதேசப் பகுதியில் வாழும் அடிப்படை வசதியற்ற மக்களுக்கு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் ஒரு தொகுதி வீடு கட்டிக் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கௌரவ அமைச்சரால் இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சியை திரிவுபடுத்தி தமிழ் மக்களுக்கு இச் செய்தியை உண்மைக்கு புறம்பாக சில அரசியல் வாதிகள் கூறிவருகின்றனர். இதன் மூலம் அம் மக்களை மேலும் துன்பப்படுத்துவதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மூவின மக்களுக்கும் என வழங்கப்பட்டுள்ள இவ் வீட்டுத் திட்டத்தில் சிங்கள பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கான வீட்டுத் திட்டத்தினை பாரதிபுரத்திற்கே வழங்க தீர்மானித்திருந்தார். ஆனால் அதனை குழப்பும் வகையில் செயற்படுவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X