2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிராம சேவகரின் பணிக்கு இடையூறு விளைவித்த தாயும் மகனும் விளக்கமறியலில்

A.P.Mathan   / 2014 ஜூன் 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் கிராம சேவகரின் பணிக்கு இடையூறு விளைவித்த தாயும் மகனும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த கிராம சேவகரையும் அவருக்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவரையும் பணியை முன்னெடுக்க முடியாதவாறு அக் கிராமத்தை சேர்ந்த தாயொருவரும் அவரது மகனும் இணைந்து இடையூறு விளைவித்தனர் என, வவுனியா பொலிஸில் கடந்த வியாழக்கிழமை (29) கிராம சேவகரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அவர்களை நேற்று முன்தினம் (30) வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டதற்கமைய, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சந்தேகநபர்களை வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X