2025 ஜூலை 16, புதன்கிழமை

06 மீனவர்களுக்கு பிணை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் 'டைனமெட்' வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 06 மீனவர்களையும் தலா 50,000 ரூபாய் பெறுமதியான  சரீரப்பிணையில் செல்வதற்கு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ சனிக்கிழமை (06) அனுமதியளித்தார்.

சனிக்கிழமை (06)அதிகாலை  இந்த மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்தனர். அத்துடன், இவர்களிடமிருந்து 2,700 கிராம் 'டைனமெட்' வெடிபொருட்களும் 10 டிக்னேற்றர் குச்சிகளும்   கைப்பற்றப்பட்டுள்ளன.

 06 மீனவர்களையும் கடற்படையினர் சனிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் தங்களிடம் ஒப்படைத்ததாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

இந்த  வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .