2025 ஜூலை 16, புதன்கிழமை

'முல்லை. சாலைக்கு பேருந்துகள் வேண்டும்'

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சாலையின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு பேருந்துகள் தேவையாக இருப்பதாக சாலை முகாமையாளர் கந்தப்பிள்ளை ஸ்ரீநிவாசன் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

1990ஆம் ஆண்;டு காலப்பகுதியில் முல்லைத்தீவு சாலையில் 35 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்தன.

தொடர்ந்து, உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முல்லைத்தீவு சாலையின்
பணிகள் முற்றாக செயலிழந்தன.

தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி முல்லைத்தீவு சாலை, 5 பேருந்துகளுடன் தனது செயற்பாட்டை மீள ஆரம்பித்தது.

தொடர்ந்து, படிப்படியாக 7 பேருந்துகள் கிடைக்கப்பெற்று தற்போது, 12 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து மேலதிகமாக 10 பேருந்துகள், இலங்கையிலுள்ள 119 சாலைகளுக்கும் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளன. அதன்மூலம் முல்லைத்தீவு சாலைக்கும் 10 பேருந்துகள் கிடைக்கப்பெறவுள்ளன.

இதனைவிட, எமது முல்லைத்தீவு சாலையின் சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை பரிசீலனை செய்து பிரத்தியேகமாக 5 பேருந்துகள் தருவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .