2025 ஜூலை 16, புதன்கிழமை

முல்லைத்தீவின் 'முல்லை முத்து' அறிமுகம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நிலக்கடலை செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக முல்லை முத்து எனும் புதிய நிலக்கடலை இன விதையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தே.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கடலையை செய்வதற்கு விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நிலக்கடலையை அறுவடை செய்யும் விவசாயிகள், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு வகைகளையும் தயாரிக்க வேண்டும் என தொடர்ச்சியாக ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

இன்று பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலையை அறுவடை செய்து அதன் மூலம் உணவு தயாரிப்புக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
 
எனவே, விவசாயிகள் மேலும் தமது நிலக்கடலை உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அதனூடாக தயாரிக்கப்படும் உணவு வகைகளை உற்பத்தி செய்வதற்கும் முல்லை முத்து எனும் புதிய இன நிலக்கடலை விதைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளோம்.

இந்த விதையானது ஆரம்ப காலங்களில் விளைச்சலுக்காக உபயோகிக்கப்பட்டுள்ளது. எனினும், அதன்பின்னர் அந்த இனம் விவசாயிகளினால் விளைச்சலுக்காக உபயோகிக்கப்படவில்லை. எனவே, அதனை தற்போது நன்கு பதப்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த முல்லை முத்து இன விதையானது, தற்போது உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலை விதையை விடவும் கொஞ்சம் நீளமாவும், பருமனாகவும் காணப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .