2025 ஜூலை 16, புதன்கிழமை

அனுமதியின்றி மதுபான விற்பனை, மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதி பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட, கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை(07) கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபரிடம் இருந்து 180 மில்லிலீற்றர் கொள்ளவுடைய 100 மதுபான போத்தல்களும், 35 பெரிய வகை பியர் ரின்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

மேற்படி சந்தேகநபர், அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிவில் உடையில் மதுபானம்வாங்குபவர் போல சென்று, சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் கூறினார்கள்.

மேற்படி சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (09) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்ந்து கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திர சாரதிகள் ஞாயிற்றுக்கிழமை (07) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மணலுடன் கூடிய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .